சந்தோஷமே இல்லை, விஜய்யை பிரிந்ததும் நல்லதுக்கே: அமலா பால்

Bookmark and Share

சந்தோஷமே இல்லை, விஜய்யை பிரிந்ததும் நல்லதுக்கே: அமலா பால்

திருமண வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்காததால் விஜய்யை பிரிந்ததாக நடிகை அமலா பால் கூறியுள்ளார். நடிகை அமலா பால் தனது காதல் கணவரான இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழ்கிறார்.

இருவரும் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அமலா கூறுகையில்,திருமண வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை.

அதனால் கணவரை பிரிந்தேன். விஜய்யை பிரிந்தது நன்மைக்கே என்று நினைக்கிறேன்.சந்தோஷம் இல்லாத திருமண பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பதில் பலனில்லை. சந்தோஷம் இல்லையா அந்த பந்தத்தில் இருந்து வெளியேற யோசிக்கக் கூடாது.

எனக்கு விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும்.என் சிறு வயதில் எடுத்த முடிவு திருமணம். விவாகரத்தால் எனக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டாலும் அதில் இருந்து என் குடும்பத்தார் என்னை மீட்டுவிட்டனர். அவர்களின் ஆதரவு எனக்கு பலமாக உள்ளது.விவாகரத்தால் எனக்கு பட வாய்ப்புகள் வராமல் இல்லை.

நான் 7 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்கிறேன்.படத்தின் ஹீரோ யார் என்று என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கேட்பது இல்லை. கதை என்ன, என் கதாபாத்திரம் என்ன என்று தான் கேட்கிறேன். நான் மாடர்ன் உடை அணிவது பற்றி விமர்சிப்பவர்களை நான் கண்டுகொள்வது இல்லை.


Post your comment





Related News
பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
ஆடை படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்
பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions