ஜனாதிபதி கையால் பத்ம விருது பெற்றனர் அமிதாப், திலீப்குமார், சுதா ரகுநாதன்!

Bookmark and Share

ஜனாதிபதி கையால் பத்ம விருது பெற்றனர் அமிதாப், திலீப்குமார், சுதா ரகுநாதன்!

ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார், பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 104 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை ஜனவரி 26ம் தேதி அறிவித்தது மத்திய அரசு.

இதற்கான விழா, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது. பாலிவுட்டின் மெகா ஸ்டார்களான அமிதாப் பச்சன் மற்றும் திலீப் குமார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி.
இதேப்போல் பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் ஜானு பருவா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதும், நடிகர் கோட்டா சீனிவாச ராவ், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

 


Post your comment





Related News
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: அமிதாப்பச்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions