வியக்கத்தக்க இந்தியாவின் புதிய தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு?

Bookmark and Share

வியக்கத்தக்க இந்தியாவின் புதிய தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு?

இந்திய சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் வியக்கத்தக்க இந்தியா (incredible india) என்ற பிரச்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று மத்திய சுற்றுலா மந்திரி மகேஷ் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “வியக்கத்தக்க இந்தியா திட்டத்திற்காக விளம்பர நிறுவனமான மெக்கேன் எரிக்சன் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே அந்த நிறுவனத்தால் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட அமீர்கான் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிட்டது” என்று விளக்கமளித்தார். 

தற்போது வெளிவந்துள்ள தகவல்படி பிக் பி என்று அழைக்கப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வியக்கத்தக்க இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கபட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

அமிதாப் இல்லாவிடில், நடிகர் அக்‌ஷய் குமார், நடிகையர் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோரில் ஒருவரை நியமிக்கப்படலாம். மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்த போது அம்மாநில சுற்றுலா வளர்ச்சித் துறையின் தூதராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
திருமணத்திற்கு பிறகு நமிதா பார்த்த முதல் படம் என்ன தெரியுமா? - நீங்களே பாருங்க.!
உதயநிதி, நமிதா நடிக்கும் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - என்ன படம் தெரியுமா?
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions