மீண்டும் இந்தியில் எமி ஜாக்சன்!

Bookmark and Share

மீண்டும் இந்தியில் எமி ஜாக்சன்!

லண்டன் நடிகையான எமி ஜாக்சனை மதராசப்பட்டினம் படத்துக்காக ஏ.எல்.விஜய்தான் கோலிவுட்டுக்கு கொண்டு வந்தார். அதையடுத்து, கெளதம்மேனன் இந்தியில் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கான ஏக் திவானா தா என்ற படத்தில் தமிழில் த்ரிஷா நடித்த ரோலில் நடித்தார்.

பின்னர், மறுபடியும் ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படத்தில் நடித்த எமிஜாக்சன், ஷங்கரின் ஐ படத்தில் நடித்து பரபரப்பான நடிகையாகி விட்டார்.

அதனால் தற்போது தமிழில் வேலையில்லா பட்டதாரி-2, கெத்து படங்களில் நடிப்பவர், மீண்டும் இந்திக்கு செல்கிறார். ஆக்சன் ஜாக்சன் படத்தை அடுத்து அக்சய் குமாரை வைத்து தான் இயக்கும் சிங் இஸ் பிலிங் என்ற படத்திற்காக பிரபுதேவாதான் எமியை புக் பண்ணியிருக்கிறார்.

ஐ படத்தில் கவர்ச்சி நாயகியாக நடித்த எமியை இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் வேடத்தில் நடிக்க வைக்கிறாராம். ஏற்கனவே எமிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ரசிகர்கள் இருப்பதால் இப்படத்தை பல மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார் பிரபுதேவா.


Post your comment





Related News
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions