2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Bookmark and Share

2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!

தமிழ் சினிமாவில் மாதத்துக்கு 30 படங்கள் ரிலீசாகிறது. அதில் 3 படங்கள் தான் தேறுகிறது. ஆனாலும் அழகு புயல் தொடர்ந்து வீசிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் சினிமாவை நோக்கி மும்பை, பெங்களூர், கேரளாவிலிருந்து அழகு தேவதைகள் வந்து இறங்கி கொண்டே தான் இருக்கிறார்.  

இந்த ஆண்டு தொடங்கி 3 மாதத்துக்குள் வந்து இறங்கிய தேவதைகளின் எண்ணிக்கை 50க்கும் மேல் இருக்கும். அவற்றில் சிலர் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அமைரா.

அனேகன் படத்தில் அறிமுகமானவர். ஆனால் ஓரிரு இந்திப் படங்களில் நடித்திருக்கிறார். அனேகன் படத்தில் 4 கெட்அப் போட்டு நான்கிலும் அசத்தினார். நடிப்பில் மட்டுமல்ல அழகிலும் அசத்தினார்.

மீடியாக்கள் அமைராவை புகழ்ந்து கொண்டிருக்க... சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் அமைரா. அடுத்து தீபா சன்னிதி. எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனசுக்குள் வந்தார்.

தெலுங்கு படங்களில் நடித்தாலும் தமிழுக்கு புதுசு. இவருக்கும் முதல் படத்திலேயே இரண்டு கேரக்டர், ஏழை வீட்டு பெண்ணாகவும், நடிகையாகவும் முதல் படத்திலேயே கனமான கேரக்டரில் நடித்தார்.

இவருக்கு அடுத்த இடம் நிக்கி கல்ராணிக்கு. டார்லிங் படத்தில் பேயாக நடித்திருந்தாலும் இவர் ஒரு அழகு பேய் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகமான சாவித்ரி ஹோம்லி, கிளாமர் இரண்டுக்கும் பொருத்தமானவராக அறிமுகமாகியிருக்கிறார்.

எட்டுதிக்கும் மதயானையில் அறிமுகமான ஸ்ரீமுகி எளிமையான தோற்றத்தால் கவர்ந்தார்.இவர்கள் தவிர வருணிகா (தரணி), பாப்ரிகோஷ் (டூரிங் டாக்கீஸ்), தனிஷ்கா (மணல் நகரம்), நேகா (இவனுக்கு தண்ணியில கண்டம்), நித்யா ஷெட்டி (ஐவராட்டம்), வித்திஷா (மகாபலிபுரம்), மெசாண்ட்ரா (வானவில் வாழ்க்கை), ஸ்ருதிபாலா (ரொம்ப நல்லவண்டா நீ) ஆகியோர் நம்பிக்கை வரவுகளாக இருக்கிறார்கள். இன்-னும் 9 மாதங்கள் இருக்கிறது. அடித்து வீசும் அழகு இந்த புயலை தாங்குமா தமிழ் சினமா?.


Post your comment

Related News
ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி!
ராசியில்லாத நடிகையா? தீபா சன்னதி அதிர்ச்சி
ஒன்மோர் டேக் கேட்கும் தீபா சன்னதி!
தமிழ் படங்களில் கவனம் செலுத்த தீபா முடிவு
தவறான நேரத்தில் வெளியாகும் எனக்குள் ஒருவன்
ஹீரோக்கள் புராணம் பாடும் தீபா சன்னதி!
திரை உலகில் எனக்கென்று தனி இடம் பிடிப்பதே என் லட்சியம் :தீபா சன்னதி
நாகார்ஜூனா மகனுடன் ஜோடி சேரும் அனேகன் கதாநாயகி
படப்பிடிப்பில் நெருக்கம்: கன்னட நடிகையுடன் ஆர்யா காதல்?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions