முதலிடத்தை நோக்கி அனிருத்..!

Bookmark and Share

முதலிடத்தை நோக்கி அனிருத்..!

இளம் இசையமைப்பாளர்களில் யுவன் பின் தங்கிவிட்டார். தமன், தேவிஸ்ரீபிரசாத் தெலுங்கில் கவனம் செலுத்துகின்றனர். ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி நடிப்பில் பிஸியாகிவிட்டனர். எனவே எவ்வித போட்டியும் இல்லாமல் செம வேகத்தில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார் அனிருத்.

தற்போது மாரி, ஆக்கோ உட்பட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார் அனிருத்.  அதோடு முதல்முறையாக ஒரு தெலுங்கு திரைப்படத்துக்கும் விரைவில் இசையமைக்கவிருக்கிறார்.

இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து வீரம் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இப்படத்தையும் ஏ.எம்.ரத்னம் தான் தயரிக்கிறார்.

கத்தி படத்திற்கு இசையமைத்தபோது பேட்டி ஒன்றில் விரைவில் அஜித் படத்துக்கு இசையமைப்பேன் என்று கூறியிருந்தார் அனிருத். எனவே, அப்போது அஜித் ஒப்பந்தமான என்னை அறிந்தால் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.  

கௌதம் மேனனோ ஹாரிஸ் ஜெயராஜை செலக்ட் பண்ணியதால் அந்த பேச்சு அதோடு முடிவுக்கு வந்துவிட்டது. இதோ இப்போது வீரம் சிவா இயக்கும் படத்தின் மூலம் அஜித்தோடு பணிபுரிய வேண்டுமென்ற அனிருத்தின் ஆசை நிறைவேறப்போகிறது.


Post your comment





Related News
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions