இணையத்தை கலக்கும் அனிருத் வீடியோ

Bookmark and Share

இணையத்தை கலக்கும் அனிருத் வீடியோ

மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவிட்டவர் அனிருத். இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர், டூப்பர் ஹிட்டாகி வருகிறது.

ஆரம்பத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க வரிசையாக ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வரிசையில், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இவரது இசை பெரிதாக ஹிட்டாகவே, தற்போது அஜித் நடிக்கும் புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் பாடியும் வருகிறார்.

இப்போது விஷயம் என்னவென்றால், அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் போன் பேசுவது போலவும், அந்த போனில் ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்று விஜய் ‘கத்தி’ படத்தில் சிரித்துக்கொண்டே கோபத்துடன் கத்துவது போன்று டப்பிங் கொடுத்துள்ளார். இது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அனிருத்துக்கு விஜய்யின் குரல் நன்றாகவே பொருந்தியிருக்கிறது. 


Post your comment





Related News
'காதல் சைக்கோ' பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் !
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா? என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions