அஞ்சலியின் அடுத்த ரவுண்ட்...! - இறைவியில் இணைந்தார்

Bookmark and Share

அஞ்சலியின் அடுத்த ரவுண்ட்...! - இறைவியில் இணைந்தார்

தன் சித்தி உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்திராவில் செட்டிலான அஞ்சலி, அடுத்த ரவுண்ட்டுக்குத் தயாராகிவிட்டார்.

சித்தி தரப்பினரால் தனக்கு பிரச்சனைகள் வரலாம் என்பதால் சில மாதங்கள் ஆந்திராவிலேயே இருந்தார். தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, தமிழில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்பிள்ளை சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வரும் அஞ்சலிக்கு இப்போதும் புதிததாக ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜிகர்தண்டா படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படம் இறைவி விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கருணாகரன் என ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.  

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இறைவி படத்துக்கு கதாநாயகிகளுக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக அஞ்சலி நடிப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்த மாத இறுதியில் இறைவி படத்தின் படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொள்கிறார். அதற்குள் மற்ற கதாநாயகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை!
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.!
என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions