'1983' கூட்டணியின் அடுத்த படத்தில் இணைந்தார் அனூப் மேனன்..!

Bookmark and Share

'1983' கூட்டணியின் அடுத்த படத்தில் இணைந்தார் அனூப் மேனன்..!

'ஆக்சன் ஹீரோ பைஜூ' என்கிற படத்தில் அதிரடி போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் நிவின்பாலி. '1983' படத்தின் மூலம் நிவின்பாலியின் கேரியரை உச்சத்தில் ஏற்றிய அப்ரிட் ஷைன் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.  

கேரள போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் சில யதார்த்த நிகழ்வுகளின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். வெறுமனே சீரியஸாக மட்டும் இல்லாமல், காமெடி, இசை இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.  

இப்போது லேட்டஸ்டாக இந்தப்படத்தில் இணைந்துள்ளார் அனூப் மேனன்.. இவரும் '1983' படத்தின் வெற்றிக்கூட்டணியில் ஒருவர் தான். சொல்லப்போனால் அந்தப்படத்தில் கிரிக்கெட் கோச்சாக இவர் நடித்திருந்த கதாபாத்திரம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் ஏகோபித்த மனதுடன் பாராட்டப்பட்டது.

தற்போது 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தில் மீண்டும் நிவின்பாலியுடன் இணைந்து நடிக்கும் தனது மகிழ்ச்சியை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் அனூப் மேனன். இந்தப்படத்தை தயாரிப்பதன் மூலம் நிவின்பாலியும் ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளார்.


Post your comment





Related News
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
நித்யா மேனனின் திடீர் முடிவு
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions