இசையமைப்பாளர் ஆனார் பாடகி அனுராதா ஸ்ரீராம்

Bookmark and Share

இசையமைப்பாளர் ஆனார் பாடகி அனுராதா ஸ்ரீராம்

குரல் வளம் என்பது எல்லோருக்கும் பிறப்பிலேயே அமைந்து விடாது….அது இறைவன் ஒரு சிலருக்கு மட்டும் அளித்திருக்கும் கொடை….அத்தகைய தனித்துவமான குரல் வளத்தை கொண்டு இசை பிரியர்களின் உள்ளங்களை தன் பாடல்களால் வென்று இருப்பவர் அனுராதா ஸ்ரீராம்….”இனி அச்சம் அச்சம் இல்லை….” , “அன்பென்ற மழையிலே…”, “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு…

” என பல பாடல்களுக்கு அனுராதா ஸ்ரீராமின் குரல் உயிர் மூச்சாக இருந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இவர் தற்போது ‘மனசு’ மற்றும் ‘விருப்பம்’ என இரண்டு பாடல்களை எழுதி, இசையமைத்து, அதை ‘டூப்பாடூ’ இசைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்….“எல்லோருடைய வாழ்க்கையிலும் பல தருணங்கள் இருக்கும்….ஆனால் ஒரு சில தருணங்களில், நம்மை அறியாமலேயே நம்முடைய மனம் வழுக்கி விழுந்து விடும்…..

இந்த கருத்தை மையமாக கொண்டு நான் உருவாக்கிய பாடல் தான் ‘மனசு எதை பார்த்து வழுக்கி விழுந்துச்சு…’ நான் எழுதி இசையமைத்த இந்த பாடலில் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் பிரவீன்…“விருப்பம் – என்னுடைய இரண்டாவது பாடல்….சிலருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற ஆசை…. சிலருக்கு கையேந்தி பவனில் சாப்பிட வேண்டும் என்ற ஆசை…. சிலருக்கு நடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை….

சிலருக்கு காரில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை….இப்படி எல்லோருக்கும் ஒருவித ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும்….. இது போன்ற விருப்பங்களை ஒன்றாக சேர்த்து உருவானது தான் ‘விருப்பம்’ பாடல்….

தற்போது என்னுடைய இந்த இரண்டு பாடல்களும் இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது….Doopaadoo.com இணையத்தளத்தில் ‘மனசு’ மற்றும் ‘விருப்பம்’ பாடல்களை கேட்டு, தங்களின் கருத்தை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்….” என்று உற்சாகமாக கூறுகிறார் இசையமைப்பாளர் – பாடகர் அனுராதா ஸ்ரீராம்.


Post your comment

Related News
சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்
பணத்திற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை: நாயகன் ஸ்ரீராம்
ஒளிப்பதிவாளர் சங்க தேர்தல்: சிகா ஆண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்..!
தேர்தல் களத்தில் இறங்கும் பி.சி.ஸ்ரீராம்?
ஆபாச பாடல்களை பாட மறுக்கும் அனுராதா ஸ்ரீராம்!
நயன்தாராதான் வேண்டும் : அடம்பிடிக்கும் ஹீரோ...!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions