இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!

Bookmark and Share

இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர். 

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். இது ஒருப்பக்கம் இருக்க தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனும் விரைவில் துவங்க உள்ளது. அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவது யார் என்பது தான் தற்போது தெலுங்கு ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

ஏனெனில் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது முன்றாவது சீசனை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஒருவேளை இது உறுதியாகும் பட்சத்தில் இந்தியாவில் முதல்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண் நடிகர் எனும் மாபெரும் சாதனையை அனுஷ்கா படைப்பார். கூடவே கோடிகளில் சம்பளத்தையும் பெறுவார். 

 


Post your comment





Related News
உடல் எடையை குறைத்து இப்படி தான் - ரகசியத் போட்டுடைத்த அனுஷ்கா.!
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions