அனுஷ்காவுக்கு ஆதரவாக பாலிவுட்

Bookmark and Share

அனுஷ்காவுக்கு ஆதரவாக பாலிவுட்

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி எப்படியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக இந்திய அணி தோல்வியைத் தழுவியது. நமது சமூக வலைத்தள குறும்பர்களும் இந்திய அளவில் அந்தப் போட்டியைப் பார்க்கச் சென்ற அனுஷ்கா ஷர்மாவை திட்டித் தீர்த்து 'மீமீ' க்களை போட்டுத் தள்ளி விட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக இவைதான் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வந்தது. அனுஷ்கா ஷர்மாவை ரசிகர்கள் இப்படித் திட்டுவது தவறு என அவருக்கு ஆதரவாக பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் மற்றவர்களைப் போல மேட்சைப் பார்க்கச் சென்றிருக்கிறார், அவ்வளவுதான், அணி  தோற்றதற்கு அவரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்கிறார்கள்.அதிலும் ரிஷிகபூர், சமூக வலைத்தளங்களில் கிண்டலடிப்பவர்கள் 'படிக்காத முட்டாள்கள்' என்று கோபத்துடன் கூறியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் பரவிய கமெண்ட்டுகள் பெரும்பாலும் ஜாலியான கமெண்ட்டுகள்தான், ஒரு சிலரைத் தவிர யாரும் அதை சீரியசாகப் போடவில்லை. அதற்கு ரிஷி கபூர் கோபமாக 'படிக்காத முட்டாள்கள்' என்று கூறியிருப்பதும் கண்டிப்பாக கமெண்ட்டுகளுக்கு ஆளாகும்.

இதற்கு முன்பும் அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி பற்றி பல சர்ச்சைகள் எழுந்ததும், இந்திய கிரிக்கெட் வாரியம் அதில் தலையிட்டுப் பேசியதாகவும் கூட செய்திகள் வெளிவந்துள்ளன.

அந்தக் காலத்திலிருந்தே நமது கிரிக்கெட் வீரர்களையும், பாலிவுட் நட்சத்திரங்களையும் இணைத்து சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம். அதனால், வீரர்களின் ஆட்டத் திறன் பாதிக்கப்படுவதை ரசிகர்கள் கண்டித்து கமெண்ட் போட்டால் கூட அது தவறில்லை. எப்படியோ இன்னும் சில நாட்களுக்கு விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


Post your comment

Related News
உடல் எடையை குறைத்து இப்படி தான் - ரகசியத் போட்டுடைத்த அனுஷ்கா.!
இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions