புகழ்ச்சி எனக்கு பிடிக்காது: நடிகை அனுஷ்கா பேட்டி

Bookmark and Share

புகழ்ச்சி எனக்கு பிடிக்காது: நடிகை அனுஷ்கா பேட்டி

புகழ்ந்து பேசுவது எல்லோருக்கும் பிடிக்கும். ஒருவரை இன்னொருவர் உயர்வாக பேசினால் அது சம்பந்தப்பட்டவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், தலையில் ஐஸ் வைத்த மாதிரி குளிர்ந்து போவார். ஆனால், என்னைப் பொறுத்தவரை புகழ்ச்சி என்பது பிடிக்காது. 

எனது நடிப்பை விமர்சனம் செய்தால், அதனை கூர்ந்து கவனிப்பேன். இந்த கதாபாத்திரம் சரியல்ல. இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்று சொன்னால் அதன்படி என்னை மாற்றிக்கொள்ளவும் முயற்சிப்பேன்.

குறைகள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வேன். ஆனால், புகழ்ந்து பேசினால் தடுமாற்றம் தான் வரும், வெட்கப்படுவேன். 

எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் புலம்புவேன். சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு, புகழ்ந்து பேசுபவர்களிடமிருந்து விலகிச் சென்றுவிடுவேன்.

என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தான் புகழ்கிறார்கள். அதை நான் விரும்புவதில்லை. சில நேரங்களில் நான், கரினா கபூரை போல் இருப்பதாக ஒப்பிட்டும் பேசுகிறார்கள். 

கரினா கபூர் எனக்கு பிடித்த நடிகை. விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு தெரியும். அதன்படியே எனது சினிமா வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Post your comment





Related News
நயன்தாரா படத்தில் முக்கியமான ரோலில் அனுஷ்கா - எந்த படம் தெரியுமா?
உடல் எடையை குறைத்து இப்படி தான் - ரகசியத் போட்டுடைத்த அனுஷ்கா.!
இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்!
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions