சென்னை மக்களுக்கு கடவுள் துணை இருக்கவேண்டும் -வெள்ளத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!

Bookmark and Share

சென்னை மக்களுக்கு கடவுள் துணை இருக்கவேண்டும் -வெள்ளத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!

மழைவெள்ளத்தால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து நிற்கிறது. திரைப்பட கலைஞர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கோடம்பாக்கம் வீடு மற்றும் ஸ்டூடியோவிலும் நீர் புகுந்துவிட்டது. இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில், “ நண்பர்களும், நலம் விரும்பிகளும் கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி.

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது. நம்மில் பலர் தற்காலிக அகதிகள் ஆகியிருப்பது வேதனையளிக்கிறது. 

என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஸ்டுடியோ டீம் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஸ்டுடியோ மற்றும் வீட்டுக்குள் புகும் வெள்ள நீரை பம்ப் மூலம் வெளியேற்றுகிறார்கள். முழுவதுமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். 

சென்னையை மீண்டும் சரியான வகையில் புதுப்பித்து, எதிர்கால இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுவோம் என நம்புகிறேன். கடவுள் நமக்கு எல்லா வகையிலும் இதனை எளிதாக செய்து முடிக்க உறுதுணையாக இருப்பார்” என்று டுவிட் செய்துள்ளனர்.


Post your comment





Related News
அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
100 ஆண்கள் இருப்பார்கள் ரெண்டே ரெண்டு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க- வசுந்தரா ஓபன்டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions