மெல்லிய கோடு என் வாழ்வில் முக்கியமான படம் - அர்ஜூன்!

Bookmark and Share

மெல்லிய கோடு என் வாழ்வில் முக்கியமான படம் - அர்ஜூன்!

குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது இயக்கி வரும் படம் ஒரு மெல்லிய கோடு. இதில் அர்ஜூன், ஷாம், அக்ஷா பட், மனீஷா கொய்ராலா நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்புகள் பூந்தமல்லியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் பிரமாண்ட அரங்கம் அமைத்து கடந்த 20 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு இந்திய அரசின் தலைமை தடயவியல் துறையின் ஆய்வகம் போன்ற செட் போடப்பட்டுள்ளது.

இதில் கடந்த 20 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் 5 நாட்கள் நடக்க இருக்கிறது.

படத்தில் நடிப்பது பற்றி அர்ஜுன் கூறியதாவது: போலீஸ் அதிகாரியாக, ராணுவ அதிகாரியாக நிறைய நடித்து விட்டேன். ஆனால் இதில் அதை தாண்டிய ஸ்பெஷலான கேரக்டரில் (தடய அறிவியல் நிபுணர்) நடிக்கிறேன்.

கேரக்டர் பற்றி இப்போது விரிவாக பேச முடியாது. எனது கேரக்டரை விட ஷாம் கேரக்டர்தான் பவர்வுல்லானது அந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன் என்றேன்.

இயக்குனர்தான் இந்த கேரக்டரை கொடுத்தார். ஒரு நல்லவன் ஒரு கெட்டவன் இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் கதை.

முதல்வன் படத்திற்கு பிறகு மனீஷா கொய்ராலா என்னுடன் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். தமிழ் சினிமாவிலும், எனது கேரியரிலும் இது முக்கியமான படமாக இருக்கும்? என்றார் அர்ஜுன். இந்த படம் கன்னடத்தில் கேம் என்ற பெயரில் தயாராகிறது.


Post your comment





Related News
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions