நடிகர் அருள்நிதி திருமணம்: நடிகர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Bookmark and Share

நடிகர் அருள்நிதி திருமணம்: நடிகர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு – மோகனாம்பாள் ஆகியோரின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும் நீதிபதி என்.கண்ணதாசன் – எஸ்.கே.கீதா ஆகியோரின் மகள் கீர்த்தனாவுக்கும் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திருமணம் நடைபெற்றது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கி அருள்நிதி – கீர்த்தனா திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் அருள்நிதி– கீர்த்தனா ஆகியோர் கருணாநிதி கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் மீது மலர் தூவி கருணாநிதி வாழ்த்தினார். 

மண விழாவுக்கு வந்தவர்களை கலைஞர் அரங்க வளாக வாசலில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, முரசொலி செல்வம், இயக்குனர் அமிர்தம், டி.ஆர்.பாலு ஆகியோர் வரவேற்றனர். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான கட்சி பிரமுகர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். 

நேற்றிரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ரோசையா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, சிவகுமார், விஷால், விவேக், குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Post your comment

Related News
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி!
மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி
நாய்கள் கடியால் பாதிக்கப்பட்ட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
நாய்கள் கடியால் மோசமான நிலையில் பிரபல நாயகி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions