நல்ல கதையை கேட்கும் போது அதற்கு சப்போர்ட் பண்ணனும் - அரவிந்த்சாமி பேட்டி

Bookmark and Share

நல்ல கதையை கேட்கும் போது அதற்கு சப்போர்ட் பண்ணனும் - அரவிந்த்சாமி பேட்டி

63 வது பிலிம்ஃபேர் தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா வரும் ஜூன் 18 தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கின்றது.

இந்த விழாவில் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த படங்களில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சிறந்த தென்னிந்தியப் படங்களை வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். இந்த விழா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் பிரபலநடிகர் அரவிந்த்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியினை, நடிகர் அரவிந்த்சாமி, பிலிம்ஃபேர் நாளிதழின் ஆசிரியர் ஜிதேஷ் பிள்ளை, மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு வினய்சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, “ நான் 1999 ஆம் ஆண்டு முதல் சினிமாவிலிருந்து விலகி இருந்தேன்.

அது ஒரு நீண்ட காலகட்டம். அந்த நேரங்களில் நான் படங்கள் பார்ப்பது கூட இல்லாமல் முழுவதும் விலகி இருந்தேன். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு இதே பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சிக்காக என்னையும் ஒரு நடுவராக தேர்வு செய்த போது தான் மிகக் குறைந்த நேரத்தில் சிறந்த பல படங்கள் பார்த்தேன். அது அப்போது ஒரு புதிய உணர்வைத் தந்தது. அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் நானும் ஒரு அங்கம் வகிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. ” என்றார். தமிழ்ப்படங்களில் இவ்வாறு நடிக்க வேண்டும் ஹிந்தி படங்களில் இந்த மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும் என்று வரைமுறை வைத்து தேர்வு செய்வீர்களா? என்ற கேள்விக்கு, “அந்த மாதிரி எந்த வரைமுறையும் கிடையாது. நல்ல கதையை கேட்கும் போது அதனை சப்போர்ட் பண்ணனும். அது மாதிரி ஒரு கதை தான் Dear Dad.


Post your comment

Related News
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions