இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?

Bookmark and Share

இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?

‘தளபதி’ படத்தில் அறிமுகமாகி, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘மின்சார கனவு’, ‘இந்திரா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அரவிந்த்சாமி, இடையில் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

பின்னர் ‘கடல்’ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு ரீ-என்ட்ரி ஆகி, ‘தனிஒருவன்’ படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. 

இந்நிலையில், தற்போது இவரைத் தேடி தமிழிலும், இந்தியிலும் வாய்ப்புகள் தேடி வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும், தொடர்ந்து வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அதில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து ‘போகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியில் ‘டியர் டாட்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு தற்போது இயக்குனராகும் ஆசை துளிர் விட்டிருக்கிறது. தான் இரண்டு கதைகள் உருவாக்கி வைத்திருப்பதாகவும், அவற்றில் ஒன்றை விரைவில் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் அல்லது இந்தி என ஏதாவது ஒரு மொழியில் படமாக்குவார் என்று தெரிய வருகிறது. 


Post your comment





Related News
20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘அரவிந்த் சாமி’
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions