விளம்பரம் சர்ச்சை! அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - ஆர்யா

Bookmark and Share

விளம்பரம் சர்ச்சை! அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - ஆர்யா

மேகி நூடுல்ஸ் பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதில் நடித்த நடிகர், நடிகையர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகிறது. இதற்கு பல நட்சத்திரங்கள் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேகி நூடுல்ஸ் பிரச்னையை தொடர்ந்து குளிர்பான உள்ளிட்ட பிற விளம்பரங்களில் நடித்த நடிகையரும் சற்று கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ஆர்யா செய்தி வௌியிட்டுள்ளார்.  

அதில் கூறியிருப்பதாவது, இறக்குமதி செய்யப்படும் எல்லா உணவு பொருட்களையும் இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் பரிசோதனை செய்து, உரிய சான்று அளித்த பின்னரே அவை விற்பனை செய்யப்படுகின்றன.

அப்படி தரமான உணவு பொருட்கள் என்று மத்திய அரசு சொன்ன பிறகே நடிகர்களாகிய நாங்களும் அது சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் நடிக்கிறோம். எனவே உணவு பொருட்களின் தரம் பற்றிய பிரச்னையில் நடிகர்களாகிய எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.

அரசு தான் இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமின்றி நாங்கள் நடித்த விளம்பரங்களுக்கு பெறப்படும் சம்பளத் தொகையில் வருமான வரியும் கட்டி வருகிறோம் என்று கூறியுள்ளார். ஆர்யா, குளிர்பானம் ஒன்றின் விளம்பர தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions