ஆர்யா நடிக்கும் ஏ.டி.எம்.கே.

Bookmark and Share

ஆர்யா நடிக்கும் ஏ.டி.எம்.கே.

சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணசுப்பையா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் ஏபிசிடி என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்தது. ஷாம், சினேகா நடித்த இந்தப்படத்தின் தலைப்பில் உள்ள ஏபிசிடி என்பது நான்கு பேருடைய பெயரில் உள்ள முதல் எழுத்துக்களைக் குறிப்பதுபோல் தலைப்பு வைக்கப்பட்டது. அதேபாணியில் தற்போது ஒரு படத்துக்கு தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான பெங்களூர் டேஸ் படத்தை ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.

பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கப்பட இயக்குநரான பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்திற்கு முதலில் சிங்கப்பூர் நாட்கள் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இப்போது லேட்டஸ்ட் தகவலின்படி ஏ.டி.எம்.கே. (ADMK) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக் என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைக் குறிக்கும்வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. உரிய இடத்தில் அனுமதி கிடைத்த பிறகு இந்த தலைப்பும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.


Post your comment





Related News
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions