உண்ணாவிரதம் இருந்த ஆர்யா, சந்தானம் மாதிரி இருக்கணும்

Bookmark and Share

உண்ணாவிரதம் இருந்த ஆர்யா, சந்தானம் மாதிரி இருக்கணும்

சினிமாவில் உண்ணாவிரதக்காட்சிகளை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வரும் நிஜமாகவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துபவர்களை பார்த்து கூட நமக்கு சந்தேகத்தை வரவழைத்து விடுவார்கள்.

தண்ணீர் பிரச்சினைக்காக சிலர் உண்ணாவிரதம் இருப்பார்கள். அடிப்படை வசதி கேட்டு சிலர் உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால் நடிகர்கள் ஆர்யாவும் சந்தானமும் காதலித்து ஏமாற்றும் பெண்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இது நிஜ போராட்டம் அல்ல, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்திற்காகத்தான். எம்.ராஜேஷ் இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவும் சந்தானமும் இணைந்து காமெடியில் கலக்கினர். இப்போது மீண்டும் இந்த மூவர் கூட்டணி ‘விஎஸ்ஓபி' படத்திற்காக ஒன்றாக இணைந்துள்ளனர்.

ஆர்யா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். ஹீரோவின் நண்பனாக இந்தப்படத்திலும் சந்தானமே நடிக்கிறார்.இப்போதெல்லாம் சந்தானம் ஜோடியில்லாமல் நடிப்பதில்லை.

விஎஸ்ஒபியில் சந்தானத்தின் ஜோடியாக ‘தாமிரபரணி' பானு நடிக்கிறார்.பாண்டிச்சேரி கடற்கரை சாலையில் தற்போது பிஸியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ‘அற்ப காரணங்களுக்காக காதலன்களை கழட்டிவிடும் காதலிகளை கண்டித்து உண்ணாவிரதம்' இருப்பவர்களாக ஆர்யாவும், சந்தானமும் நடிக்கும் காட்சி படம்பிடிக்கப்பட்டது.

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் ஆர்யாவும், சந்தானமும் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் கூல் ட்ரிங்ஸ் பாட்டில், வாழைப்பழங்கள், டிபன் கேரியரில் சாப்பாடு என ஒரு பெரிய விருந்துக்குத் தேவையானவற்றை வைத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தனராம்.

நம் ஊரில் காலை டிபன் முடித்துவிட்டு மதிய உணவு வரை உண்ணாவிரதம் இருந்த தலைவர்கள் இருக்கின்றனர். அதற்கு இவர்கள் உண்ணாவிரதம் எவ்வளவோ தேவலை என்கிறீர்களா? அந்த கதை நமக்கு வேண்டாம். இவர்களின் உண்ணாவிரதம் வெற்றி பெற்றதா? என்பதை படத்தில் பாருங்கள் என்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions