டிவி சீரியல்களில் நடிப்பதை தவிர்க்கும் ஆஷா சரத்!

Bookmark and Share

டிவி சீரியல்களில் நடிப்பதை தவிர்க்கும் ஆஷா சரத்!

மலையாளத்தில் குங்குமப்பூவு என்ற மெகா சீரியலில் அறிமுகமானவர் பாபநாசம் படத்தில் ஐஜியாக நடித்த ஆஷா சரத். ஏசியா நெட்டில் வெளியான அந்த டிவித்தொடருக்காக அவர் சிறந்த நடிகைகான விருதும் பெற்றுள்ளார்.

அதையடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட டிவித்தெடர்களில் நடித்த ஆஷாசரத், சில மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்திருக்கிறார் ஆனால், த்ரிஷ்யம் படத்தில் நடித்த ஐஜி கீதா பிரபாகர் என்ற வேடம்தான் அவரை பெரிய அளவில் பேச வைத்தது.

விளைவு, அதே த்ரிஷ்யம் படத்தின் தமிழ், கன்னட பதிப்புகளிலும் அதே ஐஜி கேரக்டரில் நடித்து இப்போது தென்னிந்தியா அளவில் பிரபலமாகி விட்ட ஆஷாசரத், மலையாளத்தில் வர்சம், ஏஞ்சல்ஸ் படங்களைத் தொடர்ந்து இப்போது பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருப்பவர், தமிழில் கமல் நடிக்கும் தூங்காவனம் படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி டிவி நடிகையான ஆஷா சரத்துக்கு சினிமாவில் பெரியதொரு இடம் கிடைத்திருப்பதால் இனிமேல் அவர் சினிமாவில்தான் முழுநேரத்தையும் செலவிடப்போகிறாராம். அதனால், புதிதாக இனிமேல் எந்த டிவித் தெடரிலும் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார் ஆஷாசரத்.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions