அசோக்கிற்கு கை கொடுக்குமா கா கா கா

Bookmark and Share

அசோக்கிற்கு கை கொடுக்குமா கா கா கா

முருகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அசோக். பிடிச்சிருக்கு, கோழிகூவுது, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், காதல் சொல்ல ஆசை, உலா, உள்பட பல படங்களில் நடித்தார். எந்தப் படமும் அசோக்கிற்கு கைகொடுக்கவில்லை. இவர் நடித்த வானம் பார்த்த சீமையிலே படம் வெளியாகவில்லை.

தற்போது கண்ணகிபுரம் சந்திப்பு, ப்ரியமுடன் ப்ரியா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கா கா கா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணனும், மகேஸ்வரி என்ற புதுமுகமும் நடிக்கிறார்கள். வெற்றிமாறன் உதவியாளர் மனோன் இயக்குகிறார்.

அம்ரித் இசை அமைக்கிறார், சரவணன் நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். "காக்கா பிடித்தே காரியம் சாதிப்பவர்கள் ரொம்ப ஆபத்தானவாகள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை காதல் கலந்து காமெடியாக சொல்லும் படம்.

காகம் எழுப்பும் கா கா கா என்கிற ஒலி உறவுகளையும் ஒன்றிணைக்கவும் ஆபத்தின் அறிகுறியை உணர்த்தவும் பயன்படுத்துகிறது. இந்த இரண்டு அம்சங்களும் படத்தில் இருப்பதால் கா கா கா என்றே தலைப்பு வைத்துள்ளளோம் என்கிறார் இயக்குனர் மனோன்.

 


Post your comment





Related News
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை
மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்த சிம்பு
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions