பாலிவுட்டில் கவர்ச்சி காட்டுவது பற்றி எழுதக் கூடாது : நிருபர்களுக்கு மிரட்டல் விடும் ஆசின்

Bookmark and Share

பாலிவுட்டில் கவர்ச்சி காட்டுவது பற்றி எழுதக் கூடாது : நிருபர்களுக்கு மிரட்டல் விடும் ஆசின்

நடிகை ஆசின் தான் பாலிவுட்டில் மட்டும் தாராளமாய் கவர்ச்சி காட்டுவது பற்றி எழுதும் தமிழ் பத்திரிக்கை நிருபர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டோஸ் விட ஆரம்பித்துள்ளாராம்.

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த ஆசின், புகழ் மற்றும் பண ஆசையால் திடீர் என்று பாலிவுட்டிற்குத் தாவினார். அங்கு அவரால் கொடிக்கம்பத்தைக் கூட கட்ட முடியவில்லை. இருந்தாலும் அயராது, தளராது, சோர்வடையாது முயற்சி செய்து வருகிறார். வாய்ப்புகளைப் பெற இந்திப் படங்களில் மட்டும் தாராளமாய் கவர்ச்சி காட்டி நடிக்கிறார். பிகினி என்றாலும் பிரமாதமாக நடிக்கத் தயார் என்கிறார். மொத்தத்தில் பாலிவுட்டில் ஆசினின் 'லெவலே' மாறிப் போய் விட்டது.

இதையெல்லாம் பார்க்கும் தமிழ் ரசிகர்கள் அடேங்கப்பா ஆசினுக்கு ஓரவஞ்சனையாப் பாரு, அங்கு மட்டும் எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கிறார் என்று கூற, இதுதொடர்பாக செய்தியாளர்களும் செய்தி வெளியிடுகின்றனர். இதைப் பார்க்கும் ஆசினுக்கு வயிறு எரிகிறதாம். தனது தரப்பில் இருந்து யாரையாவது அவ்வாறு எழுதும் பத்திரிக்கையாளருக்கு போன் செய்து டோஸ் கொடுக்கச் சொல்கிறாராம்.

உண்மையைத் தானே எழுதுகிறோம் என்று அவர்கள் கூறினால், விளக்கம் என்ற பெயரில் எக்ஸ்ட்ரா டோஸ் விடுகிறாராம்.

செய்தியாளர்களுக்கு ஆசின் டோஸ் கொடுப்பது இருக்கட்டும், அவரது செயல்கள் ஓவர்டோஸ் ஆகி விடாமல் பார்த்துக் கொள்ளட்டும் முதலில்!


Post your comment

Related News
கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட அசின்!
கவர்ச்சி காட்சியில் நடித்ததற்கு காரணம் கூறும்- நடிகை இனியா!
நடிகை ருக்குமணியை சொந்த தங்கையாக அரவணைத்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்!
ஏக்தாடைகர் புண்ணியத்தால் சல்மான் கானை போன்று கத்ரீனாவுக்கும் எகிறிய சம்பளம்!
உடல் நலக்குறைவால் பெரிய வாய்ப்புக்களை இழந்தேன் நடிகை சமந்தா!
ரசிகர்களின் வரம்புமீறிய செயளால் அலறிய இந்தி நடிகை பிபாசாபாசு !
கோடி கேட்கும் இலியானா ஓரம் கட்டுகிறது கோலிவுட்!
ரஜினிகாந்தை காலத்தை வென்ற நாயகனாகக் காட்டும் முயற்சி கோச்சடையான் மகள் சௌந்தர்யா!
காமெடி கதாபாத்திரமாக கலக்கும் சோனியா அகர்வால்!
மீண்டும் முத்தக்காட்சி பற்றி மனம்திறந்த ஆண்ட்ரியா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions