அட்டகத்தி தினேஷ் - மியா ஜார்ஜின் ஒரு நாள் கூத்து...!

Bookmark and Share

அட்டகத்தி தினேஷ் - மியா ஜார்ஜின் ஒரு நாள் கூத்து...!

ஆர்யா தயாரிப்பில் அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்த படம் - 'அமரகாவியம்'. இப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிகையாக அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ்.

அமரகாவியம் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. படம் தோல்வியடைந்தாலும், மியா ஜார்ஜின் நடிப்பு பாராட்டுப்பெற்றது. அமரகாவியம் படத்தை அடுத்து  'இன்று நேற்று நாளை' படத்தில்  விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மியாவைத் தேடி வந்தது.  

தற்போது இன்னொரு வாய்ப்பும் அவரைத்தேடி வந்திருக்கிறது. படத்தின் பெயர் - 'ஒரு நாள் கூத்து'.இப்படத்தில் 'அட்டகத்தி' தினேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் மியா. அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

கிராமத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகை மியா ஜார்ஜுக்கு 'லட்சுமி' என்ற கிராமத்துப் பெண் வேடமாம். இப்படத்தின்  படப்பிடிப்பு வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்குகிறது. 


Post your comment





Related News
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions