பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!

Bookmark and Share

பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!

இன்று உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நம் செவியில் தவறாமல் வந்து விழும் ஒரு பெயர் அவெஞ்சர்ஸ். நேரடி தமிழ் படங்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவு தமிழிலும் வரலாறு காணாத எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

முதல்நாளில் இந்தியாவில் இப்படத்தின் வசூல் ரூ. 63 கோடி என நாம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது இந்தியா முழுக்க முதல் மூன்று நாட்களில் இப்படம் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி பிரமிக்க வைத்துள்ளது.

இதற்குமுன்னர் பாகுபலி இரண்டாம் பாகம்தான் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால் அந்த சாதனையை இரண்டே நாட்களில் முறியடித்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

 முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தது மார்வெல். ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி உள்ளனர்.இதில் விஜய் சேதுபதி அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். அதே போல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
டைட்டானிக்கின் 22 ஆண்டுகால வசூல் சாதனையை இரண்டே வாரத்தில் முறியடித்த அவெஞ்சர்ஸ்!
ஒரே வாரம்தான்; அதற்குள் உலகளவில் அவெஞ்சர்ஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை!
வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல!
முதல்நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்!
ஹாலிவுட்டையே அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ் – ”யார் சாமி நீங்க” என புழம்பும் ஹாலிவுட் திரையுலகம்!
முதல் வாரத்தில் அவெஞ்சர்ஸ் இத்தனை கோடி வசூல் செய்யுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
உலகையே அதிர வைத்த அவெஞ்சர் infinity war வசூல் - மிரள வைக்கும் விவரம் உள்ளே.!
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்!
வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions