வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல!

Bookmark and Share

வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல!

உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையின் கடைசி பாகம் என்பதால் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகளவில் தற்போது வரை 8 ஆயிரத்து 384 கோடி வசூல் செய்து புதிய வசூல் சரித்திரம் படைத்துள்ளது.

மார்வெல்லின் மொத்தம் 25 சூப்பர் ஹீரோக்களுடன் களமிறங்கிய Avengers: எண்ட் கேம் திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் 2600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

முதல்நாளில் இந்தியா முழுவதும் 63 கோடி வரை வசூல் செய்த எண்ட் கேம் திரைப்படம் இதன்மூலம் இந்தியாவில் முதல்நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் பாகுபலி 2, 2.0 படங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியது. 

மேலும் முதல் மூன்று நாட்களில் இந்தியளவில் 187 கோடி வசூல் செய்துள்ள இப்படம் இதன்மூலம் குறுகிய காலத்தில் இந்தியாவில் 100 கோடி வசூல் செய்த படம் எனும் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த நிலையில் அதை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions