ஹாலிவுட்டையே அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ் – ”யார் சாமி நீங்க” என புழம்பும் ஹாலிவுட் திரையுலகம்!

Bookmark and Share

ஹாலிவுட்டையே அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ் – ”யார் சாமி நீங்க” என புழம்பும் ஹாலிவுட் திரையுலகம்!

உலகம் முழுக்க பெரும் ரசிகர் படையையே உருவாக்கி வைத்திருக்கும் அவெஞ்சர்ஸ் வரிசையின் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் இன்று இந்தியாவில் இமாலய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு திரைக்கு வந்துள்ளது.

முன்பதிவு தொடங்கிய முதல்நாளில் மட்டுமே 10 லட்சம் டிக்கெட்கள் விற்றுத்தீரும் அளவு இந்தியாவில் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் தமிழின் பிரபல பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் இப்படம் ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 முன்னதாக புதன்கிழமை சீனாவில் இப்படம் வெளியானபோது அங்கிருந்து திருட்டத்தனமாக முழு படமும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளிவந்த பிறகே அதிகளவில் இப்படம் பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் கதையில் தொடங்கி, முடிவு வரை அனைத்தையும் வெளியே கசிய விடாமல் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த படக்குழு, ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியிருப்பதால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இதுவரை தமிழ் துறையை மட்டுமே அச்சுறுத்தி வந்த தமிழ் ராக்கர்ஸ் தளம், தற்போது ஹாலிவுட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions