பாகுபலி 3-ம் பாகம் வருமா...? - எஸ் எஸ் ராஜமௌலி விளக்கம்

Bookmark and Share

பாகுபலி 3-ம் பாகம் வருமா...? - எஸ் எஸ் ராஜமௌலி விளக்கம்

பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு நேற்று உறுதியான பதிலளித்துவிட்டார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி.

ஞாயிற்றுக்கிழமை மாலை பிரமாண்டமாய் நடந்த பாகுபலி 2 இசை வெளியீட்டு விழாவில், எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியதாவது:

"பாகுபலி பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்து தான் எடுத்தோம். ஆனால், இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. 

பாகுபலி படத்தின் கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பாகமாகத்தான் இதை கொடுக்குமுடியும் என்று தீர்மானித்து இரண்டு பாகமாக எடுத்தோம். 

இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா? என்றால், அது நிச்சயமாக வராது. இருந்தாலும், பாகுபலி கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது. 

அதை சீரியலாகவோ, நாவலாகவோ சொல்ல முடிவு செய்துள்ளோம். இந்த மாதிரி 5 வருடம் ஒரு படத்தை எடுக்கவேண்டுமானால் இந்த படத்திற்கு அமைந்ததுபோல் என்மேல் முட்டாள்தனமாக நம்பிக்கை வைத்த நடிகர்களும், கலைஞர்களும் கிடைக்கவேண்டும். 

எனது அடுத்த படத்தை கிராபிக்ஸ் இல்லாமல் ஒரு சாதாரண படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். நிச்சயம் அதில் பிரம்மாண்டம் இருக்காது."


Post your comment





Related News
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions