பாகுபலி ரூ.447 கோடி வசூல்: 2–ம் பாகம் படப்பிடிப்பு செப்டம்பர் 15–ல் துவக்கம்

Bookmark and Share

பாகுபலி ரூ.447 கோடி வசூல்: 2–ம் பாகம் படப்பிடிப்பு செப்டம்பர் 15–ல் துவக்கம்

தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான பாகுபலி படம் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் இதற்கு முந்தைய தென் இந்திய மொழி படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

இந்த படம் ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை ரூ.447 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. விரைவில் இப்படம் சீன, ஜப்பானிய மொழிகளிலும் ‘டப்பிங்’ செய்து வெளியிடப்படுகிறது. அப்போது படத்தின் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து இதன் இரண்டாம் பாகம் படமாக உள்ளது. செப்டம்பர் 15–ந்தேதி இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகம் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.

முதல் பாகத்தில் தமன்னா அதிக காட்சிகளில் வந்தார். அனுஷ்கா குறைவான சீன்களில் தலை காட்டினார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கூடுதல் காட்சிகளில் நடிக்க உள்ளார். அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

பாகுபலி படத்தின் தமிழ் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வசனம் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்கள் முன்னால் போராட்டமும் நடந்தது. இதையடுத்து அந்த வசனம் நீக்கப்பட்டு உள்ளது.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions