யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்

Bookmark and Share

யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்

பல்லாள தேவனின் மனைவி யார் என்ற கேள்விக்கு ராணாவே பதில் அளித்துள்ளார். 2015ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்று கேட்டனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றி தான் பேசினர்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படத்தில் அந்த கேள்விக்கு பதில் கிடைத்தது.கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சுஷாந்த் தாஹால் என்பவர் 2015ம் ஆண்டிலேயே கணித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவரின் கணிப்பு மிகச்சரி என்பது தான்.

பாகுபலி படத்தில் பல்லாள தேவனின் மகனாக பத்ரா என்ற கதாபாத்திரத்தை காட்டியிருப்பார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை.பாகுபலி 2 படத்திலும் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை.

இதனால் படத்தை பார்ப்பவர்கள் தற்போது கேட்கும் கேள்வி, பல்லாள தேவனின் மனைவி யார் என்று தான்.யார் தான் ராணா உங்க பொண்டாட்டி என்று அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், பத்ரா வாடகைத் தாய் மூலம் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். அவனுக்கு தாய் இல்லை என்றார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions