'பாகுபலி' டிரைலரை நீக்கிய யு டியூப்...படக்குழு அதிர்ச்சி

Bookmark and Share

'பாகுபலி' டிரைலரை நீக்கிய யு டியூப்...படக்குழு அதிர்ச்சி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி'  திரைப்படத்தின் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் டிரைலர்கள் இரு தினங்களுக்கு முன் யு டியூபில் வெளியிடப்பட்டது. ஆனால், நேற்று தெலுங்கு டிரைலரை யு டியூப் திடீரென நீக்கி விட்டது.

தங்களது பாலிசியை மீறிவிட்டதாகக் கூறி யு டியூப் அந்த டிரைலரை நீக்கியுள்ளது. இப்போது யு டியூபில் அந்த டிரைலரைப் பார்க்கச் சென்றால், அதை நீக்கியதற்கான காரணத்தை மட்டுமே யு டியூப் வெளியிட்டுள்ளது, ஆனால் அதில் வீடியோ இல்லை.

இருந்தாலும் தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய டிரைலர்கள் யு டியூபில் உள்ளன, அவற்றை யு டியூப் நீக்கவில்லை. தெலுங்கு டிரைலரை ஆர்வக் கோளாறு ரசிகர்கள் அதிக ஹிட்ஸ் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அந்த டிரைலரை முழுதாகப் பார்க்காமல் உடனுக்குடன் பல முறை அந்த வீடியோவை 'ரெப்ரெஷ்' செய்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

யு டியூபில் ஒரு வீடியோவை முழுமையாகப் பார்த்தால் மட்டுமே அது ஒரு ஹிட்ஸ் கணக்கில் வரும். ஒரு வீடியோவை மிகக் குறைந்த அளவில் குறுக்கு வழியில் ஹிட்ஸ் ஏற்றச் செய்தாலும் அதை யு டியூப் தானாகவே நீக்கி விடுமாம்.

இப்போது ஒரே நாளில் 10 லட்சம் ஹிட்ஸ்களைத் தாண்டிய 'பாகுபலி'  தெலுங்கு டிரைலரின் டிரைலர் முடக்கப்பட்டுவிட்டதால், அதன் மொத்தமான ஹிட்ஸ் கணக்குச் சாதனையைத் தொடுவது சாத்தியமாகாமல் போய்விட்டது. பாகுபலி படக்குழு இது சம்பந்தமாக யு டியூபிடம் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions