மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது

Bookmark and Share

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது

பால்தாக்கரேயின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது. இதனை அவருடைய சொந்த மருமகளே தயாரிக்கிறார்.

அரசியல் களத்திலும், மக்களின் மனதிலும் தனது தனித்துவத்தால் நீங்கா இடம்பெற்றவர் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே. இவரின் வாழ்க்கை வரலாற்றை விரைவில் சினிமா படமாக்க இருக்கிறார், இந்திப்பட பெண் தயாரிப்பாளர் ஸ்மிதா தாக்கரே.

இவர் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் மருமகள் ஆவார். இவருடன் சந்தீப் சிங், ஓமங்க் குமார் மற்றும் ரஷீத் சயீது ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தை ஸ்மிதாவின் மகன் ராகுல் இயக்குகிறார். நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்குகிறது.

இந்த சினிமா குறித்து சந்தீப் சிங் கூறியதாவது:-

பால்தாக்கரேயின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்திற்கு ‘சாகேப்’ என பெயர் சூட்டப்படுகிறது. பால்தாக்கரே தன் தொண்டர்களால் ‘பாலாசாகேப்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

இதை குறிக்கும் வகையில் இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தயாரிப்பதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடவுளுக்கு நிகரான அந்தஸ்து கொண்டவர் பால் தாக்கரே. அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது மிகவும் சவாலான விஷயமாகவே கருதுகிறேன்.

இவ்வாறு சந்தீப் சிங் தெரிவித்தார்.

இவர் ஏற்கனவே இந்தியில் வசூலை குவித்த ‘ரவுடி ரத்தோர்’, ‘ராம்லீலா’, ‘மேரி கோம்’ உள்ளிட்ட படங்களின் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பால்தாக்கரேயின் வாழ்க்கை வரலாற்று படம் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி அவருடைய பிறந்த நாளன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
திருமணத்துக்கு பின் ஆர்யாவுக்கு ஏன் இந்த வேலை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions