'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்?

Bookmark and Share

'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்?

'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிக்க இருக்கிறார்கள்.

'வேதாளம்' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படம் மலையாளப் படமான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக்காக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறது தயாரிப்பு நிறுவனம். இது குறித்து அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

மம்முட்டி, நயன்தாரா, ஜே.டி. சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. ஏப்ரல் 15ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முதலில் ரஜினி நடிக்க விரும்பினார். ஆனால், சில தடங்கல்கள் ஏற்பட்டதால் அப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் முடிவைக் கைவிட்டார். தற்போது அஜித்தை நடிக்க வைக்க முயற்சிக்க இருக்கிறார்கள்.

ஏற்கனவே, அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குநர் சிவா தான் இயக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கை அஜித்தை வைத்து சிவா இயக்குவாரா என்பது, விரைவில் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் தெரியவரும்.


Post your comment





Related News
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
அஜித்தை கவர்ந்த படம்
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions