மெல்லிசை விருது விழா ஒளிபரப்பு

Bookmark and Share

மெல்லிசை விருது விழா ஒளிபரப்பு

ஜீ தமிழ் தொலைக்காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் தமிழ் மெலடி விருது வழங்கும் விழாவை நடத்தியது. இதில் சிறந்த மெல்லிசை பாடகர், பாடகிகள், இசை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறந்த இசை கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், இமான், சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோருக்கு மெல்லிசை விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஹரிகரன், அனுராதா ஸ்ரீராம், சுனிதா சாரதி உள்ளிட்ட பாடகர் பாடகிகள் இசை நிகழ்ச்சி நடத்தி விழாவை கலகலப்பூட்டினர். பிரமாண்டமாக நடந்த இந்த மெல்லிசை விருது நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று (பிப் 28) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Post your comment





Related News
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
புதிய சேனலுக்கு கை மாறும் தமிழ் பிக் பாஸ் -3
காஷ்மீர் எல்லைக்கு செல்லும் ரசிகரான ராணுவ வீரருக்கு நடிகர் விஜய் வாழ்த்து
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions