பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

Bookmark and Share

பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜூ (வயது68). 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கேப்டன் ராஜூ, கடந்த ஜூன் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வளைகுடா நாடான ஒமனுக்கு சென்றார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவரை மஸ்கட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் கொச்சிக்கு கொண்டு வந்தனர்.

கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் ராஜூ பின்னர் வீடு திரும்பினார். இந்த நிலையில், இன்று அதிகாலையில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததா அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இறந்து போன கேப்டன் ராஜூவுக்கு பிரமிளா என்ற மனைவியும், ரவிராஜ் என்ற மகனும் உள்ளனர்.

கேப்டன் ராஜூ, ராணுவத்தில் பணிபுரிந்தவர். ராணுவ பணியில் ஓய்வு பெற்ற பின்பு கடந்த 1981-ம் ஆண்டு ரக்தம் என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன்பிறகு இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு இந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.

மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். நாடோடி காற்று, ஒரு வடக்கன் வீரகதா, சி.ஐ.டி.மூசா போன்றவை இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன், கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹாரம், சத்தியராஜ் நடித்த ஜல்லிகட்டு, சின்னப்பதாஸ், ஜீவா மற்றும் ராஜகுமாரன், வேலுசாமி உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

கேப்டன் ராஜூ மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Post your comment

Related News
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions