ஹீரோவானார் அடுத்த பிரபு தேவா சந்துரு

Bookmark and Share

ஹீரோவானார் அடுத்த பிரபு தேவா சந்துரு

சேனல்களில் நடக்கும் பாட்டு போட்டியாக இருந்தாலும் சரி, நடனப் போட்டியாக இருந்தாலும் சரி. அதில் டைட்டில் வின் பண்ணுகிறவர்களின் அடுத்த இலக்கு சினிமாதான். அந்த வவையில் இப்போது ஹீரோவாகியிருக்கிறார் சந்துரு.

விஜய் தொலைக்காட்சி நடத்திய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் டைட்டில் வென்றவர் சந்துரு. நிகழ்ச்சி ஒளிபரப்பான காலத்தில் அவரது நடனத்திற்கென்றே தனி ரசிகர் வட்டம் இருந்தது. இப்போது சந்துரு காதல் காலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஐவராட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்த நித்யா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஜெய ஆனந்த் இசை அமைத்துள்ளார்.

சோமசுந்தரா என்பவர் இயக்குகிறார். செல்வ செழிப்பில் வளரும் ஒரு பணக்கார வீட்டு பையன் பெற்றவர்கள் கொடுக்கும் செல்லத்தால் எப்படி வீழ்கிறான். ஒரு பெண்ணால் எப்படி எழுகிறான் என்கிற கதை. சந்த்ருவின் ஆட்டத்திற்கும் படத்தில் வாய்ப்பிருக்கிறதாம்.


Post your comment





Related News
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions