பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீனுக்கு எய்ட்ஸ் நோய்!

Bookmark and Share

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீனுக்கு எய்ட்ஸ் நோய்!

பிரபல ஹாலிவுட் நடிகரும், பிரபல டெலிவிஷன் நடிகருமான சார்லி ஷீன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது முன்னாள் மனைவி டேனிஷ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்து உள்ளார். 

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரபலமானவர்கள் பட்டியலில் உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவரும் உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை இங்கிலாந்து பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் வெளியிட்டு இருந்தன. 

பிரபல தி சன் பத்திரிகையில். ஹாலிவுட் நட்சத்திரம் ஒருவருக்கு எச்.ஐ.வி கண்டறியப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரபலமானவர்கள் பட்டியல் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு டி.வி. நட்சத்திரம், ஒரு கவர்ச்சி மாடல், ஒரு விருது வென்ற நடிகை, ஒரு மத திரைப்பட நட்சத்திரம், ஒரு ஹாலிவுட் பிரபல சூப்பர் ஸ்டாரும் இடம் பெற்று உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பிரபல அமெரிக்க இணையதளம் ஒன்று தகவல் தெரிவித்து உள்ளது. 

சைலன்ஸ் ஆப் ஹார்ட், தி பயாஸ் நெக்ஸ்ட் டோர், விஸ்டம், எய்ட் மென் அவுட்,மென் அட் ஒர்க், நேவி சீல்,ஆல் டாக் கோ டூ ஹெவன் 2, பேர்ட் டே ஆன் தெ பிளாக், போஸ்ட் மார்ட்டம் உள்பட 77-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளவர் சார்லி ஷீன். சார்லியின் முன்னாள் மனைவி டேனிஷ் ரிச்சர்ட் (வயது 44). இவர்களுக்கு சாம் (வயது 11) லோலா (வயது 10)  என்ற இரு  குழந்தைகள். சார்லியும் டேனிஷும் கடந்த 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். 

அந்த இணையதளத்தில், சார்லிக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது அவரது முன்னாள் மனைவிக்கு தெரியும், ஆனால் அவரது குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இல்லை என கூறி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் அல்லது அவர்கள் ஒன்றாக இருந்த போது சார்லிக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டு இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. சார்லி அதற்கு பிறகு 2 திருமணங்கள் செய்துள்ளார். 

அந்த இணையதளத்தில் ஒரு முழுமையான 18 மாத விசாரணைக்கு பின்னர் நடிகர் சார்லி ஷீனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. அவர் ஒவ்வொரு இரவிலும் பிரபல ஆபாச நடிகைகளுடன் தூங்கிய வரலாறு உண்டு.

அதனால், அவர் கோடிக்கணக்காக செலவு செய்து அவரது மருத்துவ விவகாரம் இப்போது மூடி மறைக்க தீவிர முயற்சி நடக்கிறது. தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது குறித்து ஒருவரும் பேசாமல் இருக்க 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்க தயாராக இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. 

சார்லி குறைந்தது 5 ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டு இருப்பார் என்றும், அதனால் அவருக்கு இந்த நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment

Related News
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
இனியும் என்ன கிண்டல் பண்ணா, அவ்ளோ தான் - பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்.!
கண்கலங்க வைத்த சார்லி!
போதையில் பல் மருத்துவரை கத்தியால் குத்த வந்த ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions