சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் இணையத்தளங்களில் கசிந்தது

Bookmark and Share

சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் இணையத்தளங்களில் கசிந்தது

அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் திரைப்படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’. இந்த படத்தின் பாடல்களை தனித்துவமான முறையில் வெளியிட முடிவு செய்த ஜிப்ரான் மற்றும் குழுவினர், தற்போது நெடுந்தூர சாலை வழி பயணத்தில் பயணித்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னையில் ஆரம்பித்த இந்த நெடுந்தூர பயணமானது தற்போது சிங்கப்பூரை நோக்கி பயணமாகி கொண்டிருக்கிறது. தங்கள் படத்தின் முதல் பாடலை சென்னையிலும், இரண்டாவது பாடலை பூட்டானிலும், மூன்றாவது பாடலை மியான்மாரிலும் பல தடைகளை தாண்டி இந்த குழுவினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் யாவும் இணையத்தளங்களில் கசிந்திருக்கும் செய்தி, இந்த குழுவினருக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதை பற்றி படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது, “இதுவரை யாரும் மேற்கொள்ளாத முயற்சியை நீங்கள் ஏன் கையாண்டு இருக்கிறீர்கள்…என்று திரையுலகினரும், எனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களும் கேட்டதுண்டு…”

“ஒரு இசை ஆல்பம் என்பதை தாண்டி சென்னை 2 சிங்கப்பூர் பாடல்கள் யாவும் எங்கள் அனைவரின் உள்ளங்களோடு ஒன்றி இருக்கின்றது… கடந்த ஜனவரி மாதத்தில் எங்களின் சென்னை 2 சிங்கப்பூர் பயணத்தை பற்றி நான் எனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்திருந்தேன்… மியன்மார் பூகம்பம் உள்ளிட்ட பல தடைகளை நாங்கள் கடந்து வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எங்களது கார் ‘லக்ஷ்மி’ தற்போது தாய்லாந்து நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது…

விரைவில் அது சரி செய்யப்படும்…தற்போது நாங்கள் தாய்லாந்து மற்றும் மியன்மாரின் எல்லை பகுதியில் இருக்கிறோம்…. இத்தகைய தடங்கல்களால் நாங்கள் சில சமயங்களில் இந்த பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்று கூட எண்ணியிருக்கிறோம்… ஆனால் எங்கள் குழுவினரின் வலுவான நம்பிக்கை எங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றது.


Post your comment





Related News
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions