கொங்கு நாட்டில் பீட்டா பங்காளி ஹெச்ஏஎஸ்-ன் சித்ரா இசை நிகழ்ச்சி- கடும் எதிர்ப்பால் ரத்து!

Bookmark and Share

கொங்கு நாட்டில் பீட்டா பங்காளி ஹெச்ஏஎஸ்-ன் சித்ரா இசை நிகழ்ச்சி- கடும் எதிர்ப்பால் ரத்து!

தமிழகமே பீட்டாவுக்கு எதிராக கொந்தளித்தாலும் அதன் கூட்டாளிகள் பன்னாட்டு நிதி துணிச்சலால் அடங்க மறுத்து வருகின்றனர்.

பீட்டாவுக்கு எதிரான புரட்சியை பற்றி கவலைப்படாமல் ஹியூமன் அனிமல் சொசைட்டி கோவையில் பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் தற்போது இந்த இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாட்டு அடையாளம்; அதை தடை செய்ய பீட்டாவே நீ யார்? என்பதுதான் தமிழகத்தின் ஒட்டுமொத்த கேள்வி. பீட்டாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தமிழகத்தில் நீடிக்கிறது.இதனால் பீட்டா அதன் பங்காளி அமைப்புகளின் பெயரில் தொடர்ந்து வாலை ஆட்டி வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக 'கியூப்பா' என்ற குட்டியை ஏவிவிட்டு வழக்கு போட்டிருக்கிறது பீட்டா.

இந்த நிலையில் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற பீட்டாவின் மற்றொரு பங்காளியான ஹியூமன் அனிமல் சொசைட்டி (HAS) கோயம்புத்தூரில் வரும் 29-ந் தேதி பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.ஜல்லிக்கட்டு புரட்சியைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை தமிழ் மண்ணில் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாடகி சித்ராவும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தமிழர்களிடம் இருந்து கட்டணமாக பணத்தை வாங்கி தமிழர் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் சதிக்கு இத்தகைய விலங்குகள் நல அமைப்புகள் பயன்படுத்துகின்றன.

ஆகையால் கோவை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் பொதுமக்கள். கோவை போலீசில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தரக்கூடாது எனவும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் அலறிப் போன பீட்டாவின் பங்காளி தற்போது பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் விலங்குகள் நல அமைப்புகள் மீதான கண்காணிப்பும் கோபமும் வெடித்து கிளம்பி வருகிறது.

 


Post your comment

Related News
சுசிலீக்ஸுக்கு பொறுப்பேற்கிறேன், ஆனால்...: சுசித்ரா பேட்டி#suchileaks
சுசித்ரா தற்போது எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் தெரியுமா? வெளிவந்த வீடியோ
பாடகி சுசித்ரா எங்கே?: பெரிய இடத்து ஆட்களால் கடத்தலா?
சுசித்ராவை தொடர்ந்து, ஸ்ரீதேவியின் கணவரும் புகார்
நான் கணவரை விவாகரத்து செய்கிறேன், தனுஷ் கலாய்ச்சுக்கோ: பாடகி சுசித்ரா
பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியாய் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து!
எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது!- சித்ரா லட்சுமணன் கோரிக்கை
நான் பீட்டாவை ஆதரிக்கிறேன், ஆனால்- பாடகி சுசித்ரா ஓபன் டாக்
தனுஷின் கொடி படத்தில் இணைந்த லெஜன்ட்!
கண் பார்வை இல்லாதவராக நடிக்கும் விஷ்வா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions