தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?

Bookmark and Share

தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?

முன்னதாக தர்பார் முழு படத்தையும் மும்பையிலேயே படமாக்க திட்டமிட்டனர். ஆனால் தற்போது சில காரணங்களால் சென்னையிலேயே மும்பை போன்ற செட் அமைத்து படமாக்க படக்குழு தயாராகி வருகின்றனர்.பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.தர்பார் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. 

அண்மையில் மும்பையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கும் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இம்மாத இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளனர். முன்னதாக முழு படத்தையும் மும்பையிலேயே படமாக்க திட்டமிட்டனர். ஆனால் தற்போது சில காரணங்களால் சென்னையிலேயே மும்பை போன்ற செட் அமைத்து படமாக்க படக்குழு தயாராகி வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions