டார்லிங் படத்தை திருட்டு வி.சி.டி. தயாரித்த கரூர் திரையரங்கு மேலாளர் கைது

Bookmark and Share

டார்லிங் படத்தை திருட்டு வி.சி.டி. தயாரித்த கரூர் திரையரங்கு மேலாளர் கைது

கரூரில் உள்ள ஒரு சினிமா திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ள புதுப்படத்தை திருட்டு வி.சி.டி. தயாரித்த மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 15–ந்தேதி பொங்கல் பண்டிகையன்று வெளியான ஜி.வி. பிரகாஷ்குமார், நிக்கி கல்ராணி, கர்ணாஸ், பால சரவணன் ஆகியோர் நடித்த ‘டார்லிங்’ என்ற புதுப்படம் கரூரில் உள்ள ஒரு சினிமா திரையரங்கில் பொங்கல் பண்டிகை அன்று திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் புதுப்படங்களை, சிலர் திருட்டு தனமாக திரையரங்கில் வி.சி.டி. தயாரிப்பதாக பல்வேறு புகார்கள் வந்தது.

இதைத்தொடர்ந்து திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் திரையரங்குகளை கண்டுபிடிக்க சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தை சேர்ந்த சதீஷ் தலைமையில் சிலர் கடந்த ஜனவரி மாதம் 15–ந்தேதி மாலை கரூரில் உள்ள ஒரு சி.டி. விற்பனை கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மேற்கண்ட புதுப்படத்தின் வி.சி.டியை விலைக்கு வாங்கினர். பின்னர் அந்த வி.சி.டி எந்த திரையரங்கில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பதை கண்டறியும் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அந்த நிறுவனத்தினர் மேற்கண்ட வி.சி.டியை ஆய்வு செய்தனர். அப்போது புதுப்படத்தின் வி.சி.டி. கரூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் தயாரிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து டார்லிங் படத்தின் உரிமையாளர் கரூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் திருட்டு வி.சி.டி. தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று சென்னையில் உள்ள திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமியிடம்  புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு, திண்டுக்கல் திருட்டு வி.சி.டி. தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் கோவை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் திண்டுக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைசாமி, சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு நேரில் வந்து சோதனை செய்தனர். பின்னர் மேற்கண்ட திரையரங்கில் புதுப்படத்தை திருட்டு தனமாக வி.சி.டி. தயாரிக்கப்பட்டு உள்ளதற்கான சான்றிதழை காண்பித்தனர்.

இதைத்தொடர்ந்து திரையரங்கு மேலாளர் ரவிச்சந்திரன் (வயது53), ஆப்ரேட்டர் சுப்பிரமணி (52) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
மேலும் தியேட்டரில் இருந்த கியூப் கருவிகள், சர்வர் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது:–

சினிமா தியேட்டர்களில் புதுப்படங்களை திருட்டு தனமாக வி.சி.டி. தயாரித்து விற்கப்படும் வி.சி.டிக்களை பெற்று அதை மும்பையில் உள்ள ‘ரியல் இமேஜ்’ என்ற நிறுவனத்தில் கொடுத்தால், அந்த நிறுவனத்தினர் திருட்டு வி.சி.டிக்கள் இந்த சினிமா தியேட்டரில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடித்து அதற்கான சான்றிதழை வழங்குவார்கள்.

அதன்படி மேற்கண்ட படத்தின் புதுப்பட வி.சி.டி. கரூரில் தயாரிக்கப்பட்டது என்ற சான்றிதழை வைத்து, சம்பந்தப்பட்ட படத்தின் உரிமையாளர் சென்னையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருட்டு வி.சி.டி தயாரித்த 2 பேரை கைது செய்து உள்ளோம். மேலும் ஒருவரை தேடிவருகிறோம்.

இவ்வாறு கூறினர். 


Post your comment

Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்
போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது? பொங்கிய ஜி.வி.பிரகாஷ்
சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்!
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!
ஜி.வி-யை கழட்டிவிட்ட விஜய் – அட்லியின் முடிவு என்ன?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions