படக்கூலியை மும்மடங்காக உயர்த்திய டார்லிங்..!

Bookmark and Share

படக்கூலியை மும்மடங்காக உயர்த்திய டார்லிங்..!

இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'டார்லிங்' நல்ல ஓப்பனிங்கை தந்துள்ளதால், வரும் நாட்களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவை ஒரு கலக்கு கலக்கத்தான் போகிறார் அழகு டார்லிங் நிக்கி கல்ராணி.

இதற்கான அச்சாரத்தை கடந்த வருடம் வெளியான '1983' படமே வலுவாக போட்டுத்தந்து விட்டது. பெங்களூரு பொண்ணான நிக்கி கல்ராணி, கன்னடத்தில் அறிமுகமானாலும் கடந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்த '1983', 'ஓம் சாந்தி ஒசானா' மற்றும் 'வெள்ளிமூங்கா' ஆகிய மூன்று படங்களும் ஹிட்டடிக்க, இப்போது முன்னணி ஹீரோக்களின் பார்வை 'நிக்கி' பக்கம் தான். இது தவிர தெலுங்கு, கன்னட ஹீரோக்களும் நிக்கியை கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

காற்றுள்ள போதுதானே தூற்றிக்கொள்ள முடியும்.. தனது மவுசு கூடுவதை பார்த்த நிக்கி, தனது சம்பளத்தை 20 லட்சத்திலிருந்து 60 லட்சமாக உயர்த்திவிட்டாராம். தற்போது மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாக இவர் நடித்துவரும் 'இவன் மர்யாதராமன்' படம் வரும் சம்மர் வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல வினீத் சீனிவாசன் ஜோடியாக 'ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா' மற்றும் சுரேஷ்கோபியுடன் 'ருத்ர சிம்ஹாசனம்', தமிழில் பாபி சிம்ஹா ஜோடியாக ஒரு படம் என  ஹவுஸ்புல் புக்கிங்கில் போய்க்கொண்டு இருக்கிறார் நிக்கி. இதனால் தமிழில் இவர் ஆதியுடன் நடித்துள்ள 'யாகவராயினும் நா காக்க' படத்தின் மீதும் எதிர்பார்ப்பு விழுந்துள்ளது.  


Post your comment





Related News
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions