சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?

Bookmark and Share

சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி சுற்றுப்பயணம், தொண்டர்கள் சந்திப்பு, மக்கள் பிரச்சினைகளுக்கு நேரடியாக தீர்வு காணுதல் என்று அரசியல் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து இந்தியன்-2, தேவர் மகன்-2 ஆகிய 2 படங்களில் நடிக்கவும் தயாராகி வந்தார். தேவர் மகன் பெயர் வைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் விளக்கம் அளித்தார்.

இந்தியன்-2 படப்பிடிப்பு வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த படத்தின் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்துக்கு வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வரவழைத்து கமல்ஹாசனுக்கு மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்தனர்.

இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் ஈடுபடப் போவதாக கமல்ஹாசன் திடீரென்று அறிவித்து உள்ளார்.

ஆனாலும் தனது ராஜ்கமல் பட நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிப்பில் ஈடுபடும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் தேவர் மகன்-2 படம் தயாராவது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு பதில் வேறு கதாநாயகனை நடிக்க வைத்து ராஜ்கமல் நிறுவனமே தயாரிப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா?
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions