சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் தனுஷ்!

Bookmark and Share

சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் தனுஷ்!

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ், ஆடுகளம் படத்திற்கு பிறகு 100 சதவிகிதம் சிறந்த நடிகராகி விட்டார். அதுவரைக்கும் தனுஷை ஒல்லிபிச்சான, சுள்ளான் என்று சாதாரணமாக கருதி வந்த நடிகர்கள்கூட அவரது நடிப்பைக்கண்டு அசந்து போனார்கள்.  அந்த அளவுக்கு படத்துக்குப்படம் தன்னை பட்டை தீட்டிக்கொண்டே வந்த தனுஷ், அந்த படத்தில் பளிச்சிட்டார்.

அதோடு அந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். அதிலிருந்து அதுவரை தனுஷின் உடம்பை முன்வைத்து கேலியாக கிண்டலாக பேசி வந்தவர்கள்கூட அதன்பிறகு வாயடைத்துப் போயினர்.  

அதோடு, டைரக்டர்களோ பின்னர் தனுஷை வைத்து படம் பண்ணுகிறோம் என்றதும் கதையில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினர். காரணம், தனுஷைப்பொறுத்தவரை எத்தனை அழுத்தமான காட்சிகளாக இருந்தாலும் சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விடக்கூடியவராம்.

அதுவும் கேமரா முன்பு வருவதற்கு முன்பு வரை எப்படி இருந்தாலும், டைரக்டர் ஆக்சன் சொன்னதும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவாராம். அதோடு, டைரக்டர்கள் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடித்து ஒரே டேக்கில் ஓகே செய்து விடுவாராம்.

அது மட்டுமின்றி, சில காட்சிகளை டைரக்டர்களே ஓகே சொன்னாலும், தனக்கு திருப்தி இல்லை என்றால், இன்னொரு டேக் எடுத்துக்கொள்ளலாம் என்று தனுஷேதான் ரீடேக் நடித்துக்கொடுப்பாராம். அந்த அளவுக்கு தொழிலில் ஈடுபாடு காட்டுகிறாராம் தனுஷ். 


Post your comment





Related News
தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா?
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
மீண்டும் மோதும் தனுஷ், விஜய் சேதுபதி - இந்தமுறை எப்படி தெரியுமா?
அசுரன் குறித்த அசுரத்தனமான அப்டேட் வெளியானது!
ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்!
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions