டைரக்சன் செய்கிறார் தனுஷ்.?!

Bookmark and Share

டைரக்சன் செய்கிறார் தனுஷ்.?!

வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களின் வெற்றிக்குப்பிறகு உற்சாகமாக பயணித்துக்கொண்டிருக்கும் தனுஷ், தற்போது மாரி படத்தில் நடித்து முடித்து விட்டார். அனேகனில் வட சென்னைவாசியாக நடித்தவர், இந்த மாரி படத்திலும் வட சென்னைக்காரராகத் தான் நடித்திருக்கிறார்.

அதோடு, தாடி, மீசையெல்லாம் வைத்து கெட்டப்பை மாற்றி நடித்திருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களில் மாரி வேலைகளை முடித்துக்கொடுத்து விட்ட தனுஷ், நேற்று முதல் வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோதே சில காட்சிகளை தானே இயக்கிய தனுஷ், வேல்ராஜ் இயக்கும் புதிய படத்திலும் இயக்கப்போகிறாராம்.

அதாவது தான் நடிக்கும் காட்சிகளை வேல்ராஜ் இயக்க, மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை அவ்வப்போது தனுஷ் இயக்கப்போவதாக சொல்கிறார்கள்.  ஆக, தற்போது டைரக்சனில் டிரையல் பார்த்து வரும் தனுஷ், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என 4 அவதாரங்களை எடுத்திருப்பவர், ஐந்தாவதாக டைரக்டர் அவதாரத்தையும் விரைவில் எடுப்பார் என்று தெரிகிறது.


Post your comment





Related News
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions