வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார். வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது.

துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டியின் ஒரிஜினல் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழு படத்தையும் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

புதிய வர்மா படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் வர்மா படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 7ஆம் அறிவு படத்திற்கு பிறகு சுமார் 7 வருடங்களுக்கு பிறகு, ரவி கே.சந்திரன் ஒபப்பந்தமாக தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
`அர்ஜுன் ரெட்டி' படத்தில் துருவ் ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம்
அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்! ஆரம்பம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions