ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய டைரக்டர்கள் சங்கம் வேண்டுகோள்!

Bookmark and Share

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய டைரக்டர்கள் சங்கம் வேண்டுகோள்!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். 

பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று குறைத்தது.

அதற்கு அடுத்த நாளே சட்டமன்றத்தை கூட்டிய முதல்- அமைச்சர், இவர்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் விடுதலை செய்வதாக அறிவித்தீர்கள்.

அன்று தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் முதல்-அமைச்சர் அம்மாவுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள். 

ஆனால் அந்த தீர்ப்புக்கு தடை வாங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் டிசம்பர் 2 அன்று வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு, குற்றவியல் நடைமுறை சட்டத்தை

பயன்படுத்தும்பொழுது அது மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று அறிவித்தது. ஆனால் அதே உச்சநீதிமன்ற அரசியல் அமர்வு மாநிலங்களுக்கு இருக்கும் அரசியல் அமைப்பு அதிகாரம் 161 அல்லது குடியரசு தலைவருக்கு உள்ள அதிகாரம் 72 ஆகிய கட்டற்ற அதிகாரங்களில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என்றும் தெளிவாக விளக்கியுள்ளது. 

இந்த நிலையில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய புலனாய்வு அதிகாரி தியாகராஜன் இன்று அந்த வாக்குமூலம் தவறானது என்று அறிக்கை கொடுத்திருப்பது நம் நாட்டில் இல்லாத நிகழ்வாக நடந்து இவர்களின் குற்றத்தன்மையின் மேல் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இந்த வழக்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருணையோடு அணுகி இவர்களின் கால் நூற்றாண்டு கால சிறைவாசத்தை கணக்கில் கொண்டு இவர்களின் அப்பழுக்கற்ற நன்னடத்தை ஆவணங்களையும் கணக்கில் கொண்டு மீதமுள்ள இவர்களின் ஆயுட்காலத்தை பயனுள்ள வகையில் செலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் சங்கம் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Post your comment

Related News
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்
மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions