பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

Bookmark and Share

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் (79). சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். 

மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, அதர்வாவின் பூமராங் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
பிரபல இயக்குனர் தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்
தலைவி தலைப்பில் ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - விஜய் இயக்குகிறார்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்
தங்கமீன்கள், தரமணி இயக்குனருக்கு சர்வதேச அளவில் கிடைத்த புது அங்கிகாரம்!
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions