அழகா? நடிப்பா? : எனக்குள் ஒருவன் சித்தார்த்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த புதிய பாதை

Bookmark and Share

அழகா? நடிப்பா? : எனக்குள் ஒருவன் சித்தார்த்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த புதிய பாதை

சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘எனக்குள் ஒருவன்’. இப்படம் கன்னடத்தில் வெளியான ‘லூசியா’ படத்தின் ரீமேக் ஆகும். சினிமாவில் சித்தார்த்தின் 25-வது படமாக இது உருவாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக தீபா சன்னிதி நடிக்கிறார்.

பிரசாத் மாறார் படத்தை இயக்குகிறார். இவர் ‘பிட்சா’ படத்தில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தின் கதையை கன்னடத்தில் இருந்து தமிழுக்கு ரீமேக் உரிமையை வாங்கி, சிவி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற மார்ச் 6-ந் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிரிந்து கொண்டனர்.

அப்போது சித்தார்த் கூறும்போது,

இப்படம் கன்னடத்தில் ஒரு புதுமுக ஹீரோ நடித்து வெற்றி பெற்ற படம். அவர் அங்கு இரட்டை வேடத்தில் நடிப்பது புதிது என்பதால் அவரது நடிப்பை அனைவரும் ரசித்தனர்.

ஆனால், நான் பல படங்களில் நடித்திருப்பதால், அதேபோல் நடித்தால் ரசிக்கமாட்டார்கள் என்பதால், இந்த கதையில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என எண்ணினோம். அதனால், அந்த கதையை அப்படியே மாற்றி அமைத்து, டயலாக் எல்லாம் புதுமையாக கொடுத்துள்ளார் இயக்குனர்.

இதை படித்துப் பார்த்ததுமே எனக்கு இப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்படத்தில் நடித்திருக்கும் அனைவருக்குமே இரண்டுவிதமான ரோல் இருக்கும். ஒரு கதாபாத்திரம் நான் ரொம்பவும் கருப்பா இருக்கிற மாதிரி இருக்கும். அந்த கெட்டப்புல நான் நடித்தபோது, படக்குழுவினருக்குகூட நான் யாரென்றே தெரியாத அளவுக்கு இருந்தது. இது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

இதுவரைக்கும் நான் அழகா இருக்கிறேன்னுதான் என்னை நிறைய பேர் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள். இந்த படத்துக்கு பிறகு அழகையும் மீறி எனது நடிப்பிற்காகவும் நிறைய படங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல் இப்படம் வெளிவரும் நாளை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உலகக் கோப்பை கிரிக்கெட் - பரீட்சைக்கும் மத்தியில் இப்படத்தை வெளியிடுகிறோம். முழுக்க எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த பலபரீட்சையில் இறங்குகிறோம். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்.

இந்த சீசனில் நிறைய பேர் படங்களை வெளியிட பயப்படுவார்கள். இந்த படம் வெளிவந்த பிறகு எங்களை குறிக்கோள் காட்டி நிறைய பேர் இந்த சீசனில் படங்களை வெளியிடுவார்கள் என்று பெருமை பொங்க கூறினார். 


Post your comment

Related News
75 லட்சத்திற்கு விலைபோன தெலுங்கு எனக்குள் ஒருவன்
ரீமேக் படமே வேண்டாம்! சித்தார்த் திடீர் முடிவு
வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்
சித்தார்த்தை ஏமாற்றிய \'எனக்குள் ஒருவன்\'
எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!
தவறான நேரத்தில் வெளியாகும் எனக்குள் ஒருவன்
ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி!
எனக்குள் ஒருவன் மார்ச் 6ந் தேதி வெளிவருகிறது
சித்தார்த்துக்கு வரும் அடுத்த சோதனை...!
மார்ச் 6ஆம் தேதி எனக்குள் ஒருவன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions